
இரண்டு மாதம் படுக்கையில் இருந்தால் ரூ.13 லட்சம்: நாசா வழங்குகிறது படுத்து கொண்டே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்றால் யாராவது நம்புவீர்களா? ஆம் அமெரிக்காவின் நாசா அப்படி ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் ராக்கெட் எஞ்சினியரிங் அல்லது டிசைனிங் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜஸ்ட் படுக்கையில் படுத்து கொண்டிருந்தால் போதும், உங்களுக்கு நாசா பணம் கொடுக்கும். இரண்டு மாதம் படுக்கையில் இருந்தால் ரூ.13 லட்சம்: நாசா வழங்குகிறது! செயற்கை புவியீர்ப்பு விசை குறித்து நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான ஈஎஸே என்ற நிறுவனமும் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த செயற்கை புவியீர்ப்பு விசை விண்வெளிக்கு செல்லும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதால் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. 24 வயது முதல் 55 வயது வரை 24 வயது முதல் 55 வயது வரை இந்த ஆய்வில் 24 வயது முதல் 55 வயது வரையிலான 12 ஆண்கள் மற்றும் 12 பெண்கள்...